அரைநெல்லிக்காய் சாதம்
  • 107 Views

அரைநெல்லிக்காய் சாதம்

சாதத்தில் வெரைட்டீஸ் ட்ரை பண்ணியிருப்பீங்க. இப்போ சத்துள்ள சுவையான நெல்லிக்காய் சாதம் செஞ்சுப் பாருங்க. உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின் 'சி' நிறைந்த நெல்லிக்காய் சாதம் குழந்தைகள் மற்றும் பெரியவங்களுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி - 2 கப்
  • அரை நெல்லிக்காய் - 1/2 கப்
  • பச்சை மிளகாய் - 10
  • தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்
  • பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
  • கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் - தலா 1/2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு

செய்முறை:

* அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள்.

* நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள்.

* 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்குங்கள்.

* பிறகு நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி நைசாக அரைத்தெடுங்கள்.

* மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பலை, ஆகியவற்றை தாளியுங்கள்.

* சாதத்தில் நெல்லிக்காய் விழுது, கடுகு ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.