தேங்காய் ரசம்
  • 94 Views

தேங்காய் ரசம்

என்னது.... தேங்காயில் ரசமானு யோசிக்கிறீங்களா... தேங்காயை எதுல சேர்த்தாலும் அதன் சுவையே அலாதிதான். அந்த வகையில் ரசத்துலயும் தேங்காய சேர்த்து பண்ணிப்பாருங்க... சுவையும் மணமும் சும்மா பட்டைய கௌப்பும்!

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் துருவல் - 1 கப்
  • பூண்டு - 5
  • தக்காளி விழுது - 1/2 கப்
  • பச்சை மிளகாய் - 3
  • மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
  • கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி அளவு
  • உப்பு - தேவையான அளவு


தாளிப்பதற்கு:

  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம், கடுகு - சிறிதளவு
  • மெலிதாகச் சீவிய பூண்டு - 2
  • கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* தக்காளியை சுடு நீரில் வைத்து, 10 நிமிடம் கழித்து, மேல் தோல் நீக்கி விட்டு விழுதாக அரைக்கவும்.

* தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு தண்­ணீர் ஊற்றி, அதில் தக்காளி விழுது சேர்த்துக் கொதிக்க விடவும்.

* பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, மிளகு தூள், மல்லித்தூள் போட்டு லேசாக கொதிக்க விடவும்.

* நுரைத்து வந்தால் போதும். நெய்யில் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

* ஆந்திர மக்கள் இந்த ரசத்தைப் பொங்கலுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். இது சாதத்துடன் பரிமாறவும் ஏற்றது.