அச்சு முறுக்கு
  • 574 Views

அச்சு முறுக்கு

தேவையான பொருள்கள் :

  • ஐ.ஆர்.20 அரிசி - 1/2 கிலோ
  • உளுந்தம் பருப்பு - 125 கிராம்
  • டால்டா - 500 கிராம்
  • உப்பு - கொஞ்சம்

செய்முறை :

புழுங்கல் அரிசியை ஊற வைத்து கிரைண்டரில் மழுமழுப்பாக ஆட்டிக் கொள்ளவும். மாவு தோசை மாவு பதம் இருக்க வேண்டும். உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து மிக்ஸியில் பவுடராக அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் டால்டாவை ஊற்றிக் காய வைத்துக் கொள்ளவும். முறுக்கு அச்சில் மாவை வைத்து பிழியவும். சிவக்க வெந்ததும் எடுத்துத் தட்டில் போட்டுக் கொள்ளவும்.