பாதாம் அல்வா
  • 326 Views

பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்:-

  • பாதாம் பருப்பு - 250 கிராம்
  • நெய் - 800 மி.லி.
  • பால் - 200 மி.லி.
  • சர்க்கரை - 500 கிராம்
  • ஏலக்காய் - 4

செய்முறை:-

பாதாம் பருப்பை நன்றாக ஊறவைக்கவும். அதை தோல் நீக்கி அரைக்கவும், அரைத்த விழுதை பாலில் கரைக்கவும். வாணலியில் திட்டமாக நீர்விட்டு, சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். அதனுடன் பாதாம் பருப்பு கலவையைக் கலந்து கை படாமல் கிளறவும். கிளறும் போதே நெய், கேசரிப் பௌடர், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். அல்வா பதமாக வரும்போது இறக்கி விடவும்.