ஆலு ஜாமுன்
 • 297 Views

ஆலு ஜாமுன்

தேவையான பொருட்கள்:

 • உருளைக்கிழங்கு - 1 கப் வேகவைத்து உதிரியாக்கியது
 • மைதா - 1 கப்
 • சுத்தமான நெய் - 1 டீஸ்பூன்
 • சமையல் சோடா - 1 சிட்டிகை
 • நெய் (அ) எண்ணெய் பொரித்தெடுக்க


சர்க்கரைப் பாகு செய்ய:

 • சர்க்கரை - 1 கப்
 • தண்ணீர் - 1 கப்
 • குங்குமப்பூ - சிறிதளவு
 • ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
 • ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்

செய்முறை:

உருளைக் கிழங்கை பிரஷர் குக்கரில் வேக வைத்து மேல் தோலை உரித்துக் கொள்ளவும். பிறகு அதை உதிர்த்து விட்டு அளந்து கொள்ளவும். சூடாக இருக்கும் போதே மெத்தென்று மசித்துக் கொள்ளவும். தட்டையான தட்டில் நெய், சோடா மாவு இரண்டையும் சேர்த்து விரல் நுனிகளால் தேய்த்துக் கொள்ளவும். பிறகு அதில் மைதா சேர்த்து நெய் மாவோடு சீராக கலந்து கொள்ளும் வரை பிசறி விடவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து மென்மையாக மாவைப் பிசைந்து கொள்ளவும் (தேவையானால் கூடுதலாக மைதா சேர்த்துக் கொள்ளவும்) கலந்து கொள்ளும் போது ஒரு போதும் தண்ணீர் சேர்க்க வேண்டாம். சிறிய உருண்டைகளாக தயாரித்துக் கொள்ளவும். நடுத்தர சூட்டில் நெய்யில் பொன் நிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும். பிசுபிசுப்பான பதத்திற்குச் சர்க்கரைப் பாகைத் தயாரித்துக் கொள்ளவும். அடுப்பிலிருந்து இறக்கிய பின், குங்குமப்பூ, ஏலக்காய்பொடி, எசன்ஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். பாகு சூடாக இருக்கும் போதே பொரித்தெடுத்த ஜாமுன்களைப் போட்டு ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் கழித்து பரிமாறலாம்.