ஆலு மேத்தி
  • 287 Views

ஆலு மேத்தி

தேவையானவை:

  • உருளைக் கிழங்கு - 1/4 கிலோ
  • வெந்தயக் கீரை - 2 கட்டு
  • உப்பு - தேவையான அளவு
  • மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்
  • மிளகாயத் தூள்- 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய், பட்டை, லவங்கம் தாளிக்க

செய்முறை:

உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள். வெந்தயக் கீரை வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய விட்டு காய்ந்ததும் சீரகம், பட்டை, லவங்கம் போட்டு தாளியுங்கள். பிறகு வெந்தயத்தைப் போட்டு வதக்கி விட்டு வெந்தயக் கீரையை போட்டு கிளறுங்கள். இதில் மாங்காய் பொடி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வேக வையுங்கள். கீரை வெந்ததும் வேக வைத்து மசித்து உருளைக் கிழங்கு போட்டு கிளறி இறக்குங்கள்.