கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, நொறுக்கிய அப்பளம், தேங்காய்த் துருவல், மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடுங்கள். 2 விசில் வந்ததும் இறக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கூட்டில் சேருங்கள்.