ஆப்பிள் டிலைட்
 • 535 Views

ஆப்பிள் டிலைட்

தேவையான பொருட்கள்:

 • பெரிய ஆப்பிள்கள் - 3
 • பொடி செய்யப்பட்ட காய்ந்த ரொட்டியின் பாகங்கள் - 1 கப்
 • நாட்டு சர்க்கரை - 3/4 கப்
 • வெண்ணெய் - 1 கப்
 • பழ கலவை ஜாம் - 1 டேபிள் ஸ்பூன்
 • காய்ந்த ரொட்டி - 1 துண்டு
 • லவங்கப்பட்டை - 1 டீஸ்பூன்
 • முட்டையின் மஞ்சள் பாகங்கள் - 2

அலங்கரிக்க:

 • சிறிய ஆப்பிள் - 3
 • சிவப்பு ஜெர்ரி பழங்கள் - 6
 • அடித்து கலக்கப்பட்ட க்ரீம்

செய்முறை:

ரொட்டியின் கெட்டியான மேல் பாகத்தை எடுத்து விட்டு அதன் மிருதுவான பாகத்தை விரல்கள் அளவு மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். கொஞ்சம் வெண்ணெயை எடுத்து உருக வைத்துக் கொள்ளவும். உருகிய வெண்ணெயில் வெட்டி வைத்திருக்கும் ரொட்டித் துண்டுகளின் இரண்டு முனைகளையும் தோய்த்து எடுக்கவும். ஆப்பிளின் தோலை சீவி விட்டு, அதன் உள்ளிருக்கும் பாகங்களைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளில் வெண்ணெய்யைத் தடவி, கொதிக்கும் நீரில் வேக வைக்கவும். அவை மிருதுவாக மாறியதும், நன்கு அவற்றை மசித்து, கூழாக தயாரித்து வைத்து கொள்ளவும். முட்டையின் மஞ்சள் பாகங்கள், பழ மிக்சர் ஜாம், பொடியாக்கபட்ட லவங்கப்பட்டை முதலியவைகளை மசித்து வைத்து ஆப்பிளுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.ஃபுட்டிங் செய்யும் பாத்திரத்தை எடுத்து அதன் உட்பக்கம் சுற்றிலும் வெண்ணெயை தடவவும். அதன் பின்பு மெலிதாக வெட்டப்பட்ட ரொட்டித் துண்டுகளை ஃபுட்டிங் நடுவில் ஆப்பிள் கலவையை ஊற்றி வைக்கவும். ரொட்டித் துண்டில் வெண்ணெய் தடவி, ஆப்பிள் கலவையின் மேல் பாகத்தில் அதை மூடுவது போல வைக்கவும். வெண்ணெய் பேப்பரினால் ஃபுட்டிங் பாத்திரத்தை மூடி இறுக கட்டி விடவும். பின்பு ஃபுட்டிங் பாத்திரத்தை குக்கரில் வைத்து 30 நிமிடங்கள் குக்கரை அடுப்பில் தொடர்ந்து வைக்கவும். ஆப்பிளை இரு சமபாதிகளாக வெட்டி, ஜாமையும், க்ரீமையும் அந்த பாதிகளில் தடவி, ஜெர்ரி பழங்களையும் இடையிலே வைத்து, அலங்கரித்து விடவும். இப்போது சுவையான ஆப்பிள் டிலைட் ரெடி.