பாலக் பனீர்
  • 302 Views

பாலக் பனீர்

தேவையானப் பொருட்கள்:

  • பசலைக் கீரை - ஒரு கட்டு
  • பனீர் - ஒரு கப்
  • மஞ்சள் தூள் - கால் டீறீறீஸ்பூன்
  • மிளகாய் - 2
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
  • நெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். பசலைக் கீரையை வதக்கி, அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாயைக் கிள்ளி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். இதில் அரைத்த பசலைக் கீரையைப் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க விடுங்கள். பாலக் கிரேவி நன்றாகக் கொதித்த பிறகு நெய்யில் பொரித்த பனீர் துண்டுகளை போட்டு பரிமாறுங்கள்.