வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
  • 250 Views

வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்

கோடை ஆரம்பிச்சாச்சு... இனி என்ன வீட்டிலேயே குளு குளு ஐஸ் க்ரீமா செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே..

தேவையான பொருட்கள்:

  • முந்திரிப் பருப்புகள் - 1/4 கிலோ
  • ஆப்பிள் சாறு - 1 கப்
  • பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) - 3
  • பால் - 1 கப்
  • தேன் - 3 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.

* இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.

* இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.

* இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.