வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு
  • 136 Views

வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு

வாழைக்காயில் சமையலானு கேக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவுங்களுக்கான ஸ்பெஷல்தான் இந்த ரெசிபி. செஞ்சு சாப்பிட்டு பாருங்க... அடடே! இம்புட்டு நாளா மிஸ் பண்ணிட்டோமேனு பீல் பண்ணுவீங்க..

தேவையான பொருட்கள்:

  • நாட்டு வாழைக்காய் - 5
  • கடலைப்பருப்பு - 150 கிராம்
  • மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
  • சீரகப்பொடி - 2 டீ ஸ்பூன்
  • தேங்காய் மூடி - 1 சிறியது
  • சின்ன வெங்காயம் - 4

தாளிக்க:

  • மிளகாய் வத்தல் - 5
  • கடுகுஉளுந்து - தேவையான அளவு
  • கருவேப்பிலை - தேவையான அளவு
  • சின்ன வெங்காயம் - 6
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* கடலைப்பருப்பை இரண்டு மணிநேரத்திற்கு முன்பே ஊறவைத்துக்கொள்ளவும்.

* வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* ஊறவைத்த கடலைப்பருப்பில் மஞ்சள்தூள், சீரகப்பொடியுடன் வெங்காயத்தை தட்டிப் போட்டு வேகவைக்கவும். (முக்கால் வேக்காடு வேகவைத்தால் போதும்)

* வெந்த கடலைப்பருப்பில் பொடியாக நறுக்கி வைத்த வாழைக்காய், உப்பு சேர்த்து 15 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

* தேங்காய் துறுவலை வழுவழுவென்று அரைக்காமல் கரகரவென்று அரைத்து சேர்க்கவும்.

* பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகுஉளுந்து, மிளகாய்வத்தல், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

* வத்தல்குழம்பு, ரசத்துக்கு பொருத்தமான சைட் டிஷ் இது.