ஃபிரிணி
  • 121 Views

ஃபிரிணி

தேவையானவை:

  • பால் - 1 லிட்டர்
  • பாஸ்மதி அரிசி - 1/2 கப்
  • சர்க்கரை - 1 கப்
  • இனிப்பில்லாத கோவா - 1/4 கப்
  • பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்
  • பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய்த்தூள் - 1/4 ஸ்பூன்
  • குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை:

பாலைக் காய்ச்சுங்கள், பாஸ்மதி அரிசியை ரவை போல் உடைத்து, காயும் பாலில் சேருங்கள். அத்துடன் ஒரு கப் தண்ணீரையும் சேருங்கள். மிதமான தீயில் நன்கு வேகவிடுங்கள்.

அரிசி ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையைச் சேருங்கள். இரண்டும் சேர்ந்து நன்கு கொதிக்கும்போது, பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த்தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, கலந்து இறக்குங்கள். குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

புத்தம்புதிய பன்னீர் ரோஜா இதழ்களை மேலே தூவியும் பரிமாறலாம். கண்ணுக்கும் சேர்த்து விருந்து படைக்கும் இது.