ஃபிரிணி பாயசம்
  • 294 Views

ஃபிரிணி பாயசம்

தேவையானவை:-

  • பால் - 4 கப்,
  • அரிசி மாவு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை - ஒன்றே கால் கப்
  • ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
  • பாதாம் - 5
  • பிஸ்தா - 5
  • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை:-

3 கப் பாலை பொங்கக் காய்ச்சுங்கள். 1 கப் பாலில் அரிசி மாவைக் கரைத்து, காய்ச்சிய பாலில் அதை சேருங்கள். தொடர்ந்து அதை நன்கு காய்ச்சி சர்க்கரை சேருங்கள். 2 டேபிள் ஸ்பூன் சூடான பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, காய்ச்சிய பாலில் சேர்த்து இறக்குங்கள். சீவிய பாதாம், பிஸ்தா, ரோஸ் எசன்ஸ் சேர்த்து குளிர வைத்து பரிமாறிப் பாருங்கள். "ஒன்ஸ்மோர்" கேட்கவைக்கும், ரோஜா மணக்கும் ஃபிர்ணி