முதலில் பச்சரிசியை உதிரி உதிரியாக வடித்து கொள்ளவும். இறாலை நன்கு சுத்தம் செய்துக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றவும், காய்ந்ததும் வெங்காயம் தக்காளி, பச்சைமிளகாய், ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிப் போடவும். பிறகு பட்டை பிரிஞ்சி இலை கறிவேப்பிலை, இறாலை போட்டு நன்கு வதக்கவும். பொன் நிறமாக வதங்கியதும் தட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு, மிளகாய்தூள், மஞ்சதூள், உப்புதூள் போட்டு நன்கு கிளறவும். அரை கோப்பை தண்ணிர் ஊற்றி வேகவைக்கவும். மசாலா தொக்கு போல் ஆன உடன் கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சோற்றை கொட்டி, நெய்யை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். சுவையான இறால் பிரியாணி தயார்.