கத்திரிக்காய் பிரியாணி
 • 637 Views

கத்திரிக்காய் பிரியாணி

கத்திரிக்காயில் பிரியாணியா என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? நெசமாத்தாங்க.. கத்திரிக்காயில் பிரியாணியும் செய்யலாம் தெரியுமா... கத்திரிக்காயை கண்டால் காததூரம் ஓடுறவுங்ககூட கத்திரிக்காய் பிரியாணியை சாப்பிட்டு பார்த்தால் விடவே மாட்டாங்க... அந்தளவுக்கு இதன் ருசிக்கு அனைவரும் அடிமையாகிவிடுவோம்னா பாத்துக்கோங்களேன்!

தேவையான பொருட்கள்:

 • பெரிய கத்திரிக்காய் - 1
 • பாஸ்மதி - 2 கப்
 • வெங்காயம் - 1
 • தக்காளி - 1
 • பச்சை மிளகாய் - 6
 • பால்(அ)தேங்காய்ப்பால் - 3 கப்
 • இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
 • மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
 • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
 • எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
 • சோம்பு - 1 டீ ஸ்பூன்
 • புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
 • உப்பு-எண்ணெய் - தேவைக்கு

வறுத்து பொடிக்க:

 • ஏலக்காய் - 3
 • பட்டை - சிறு துண்டு
 • கிராம்பு - 4
 • பிரியாணி இலை - 2

செய்முறை:

* வெங்காயம்-தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும். கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.

* அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்-தக்காளி-பச்சை மிளகாய்-இஞ்சி பூண்டு விழுது-வறுத்து பொடித்த பொடி-கத்திரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

* பிறகு உப்பு-மஞ்சள்தூள்-அரிசி-எலுமிச்சை சாறு-புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

* குறிப்பு: இதற்கு உருளை வறுவல் பெஸ்ட் காம்பினேஷன்.