கத்தரிக்காய் சட்னி
  • 514 Views

கத்தரிக்காய் சட்னி

கத்தரிக்காய்னாலே சிலருக்கு பிடிக்காது. ஆனா பிடிச்சவங்களுக்கு கத்தரிக்காய சும்மா அவிச்சு கொடுத்தாலும் சாப்ட்டுருவாங்க. அதுல அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி. சுட்ட கத்தரிக்காய்க்கு எங்கிருந்து தான் வரும்னே தெரியல அப்படியொரு ருசி.. ம்ஹூம் சான்சே இல்ல.. சுட்ட கத்தரிக்காய்ல சட்னியா ஆஹா... பிரமாதம்னு எல்லாரும் பாராட்டுவாங்க..

தேவையான பொருட்கள்:

  • கத்தரிக்காய் - 2
  • தயிர் - 2 கப்
  • வெங்காயம் - 3
  • சர்க்கரை - 1 டீ ஸ்பூன்
  • கடுகு - 1/2 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 3
  • தனியா - 1/2 கப்
  • எண்ணெய் - 100 மி.லி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • துருவிய தேங்காய் - 1 கப்
  • பச்சை மிளகாய் - 3 அரைத்தது
  • இஞ்சி - 2

செய்முறை:

* கத்தரிக்காய் மேல் சிறிது எண்ணெய் பூசி சுடவும்.

* மேல் காம்பு, தோல் இவற்றை நீக்கவும். சுத்தம் செய்து மசித்து கொள்ளவும்.

* இப்பொழுது தயிர், வெங்காயம் அரைத்த தேங்காய் விழுது, மிளகாய், சர்க்கரை தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.

* இரண்டு டீ ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து கறிவேப்பிலை, கடுகு போட்டு பொரிந்தவுடன் எண்ணெயை மசித்த கத்தரிக்காயில் ஊற்றவும். கலந்து குளிரச் செய்யவும்.

* கொத்தமல்லியுடன் அலங்கரித்து குளிர்ச்சியாக ஆன பிறகு பரிமாறவும். ஊற்றவும். சிறுதீயில் வைக்கவும். சொத்தமல்லியை தூவி பராத்தாவுடன் பரிமாறவும்.

* ஹைதராபாத்திலிருந்து அறிமுகமான இந்த உணவை பிரியாணியுடன் பரிமாறலாம்.

குறிப்பு:


கத்தரிக்காய்க்குப் பதிலாக வேறு வகையான பெரிய மிளகாய்களை வறுத்து பயன்படுத்தி மிர்சி காசாலன் செய்யலாம்.