பட்டன் தட்டை
  • 104 Views

பட்டன் தட்டை

குடும்பத்தோடு மாலை நேரத்தில் உட்கார்ந்து கொரிக்க நறுக்கென ஒரு சிற்றுண்டிதான் இந்த பட்டன் தட்டை. கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டில் கிடைக்காத சுவையும், பாசமும் வீட்டில் நீங்களே செய்து பரிமாறும் போது உணர்ந்து கொள்வீர்கள்...

தேவையான பொருட்கள்:

  • புழுங்கலரிசி - 2 கப்
  • பொட்டுக்கடலை மாவு - 1/2 கப் (பொட்டுக்கடலை நமுத்திருந்தால், லேசாக வறுத்து அரைக்கவேண்டும்)
  • பாசிப்பருப்பு மாவு - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)
  • பச்சை மிளகாய் - 8
  • பெருங்காயம் - சிறிது
  • நன்கு புளித்த தயிர் - 1/4 கப் (அ) எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
  • பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் - தேவைக்கு
  • உப்பு - தேவைக்கு
  • தேங்காய் துருவல் - 1/2 கப்

செய்முறை:

* புழுங்கலரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.

* பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து, நைஸாக (கெட்டியாக) அரைத்துக்கொள்ளுங்கள்.

* அதில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு சேர்த்து, நன்கு கெட்டியாகப் பிசையுங்கள்.

* அந்த மாவிலிருந்து சுண்டைக்காயளவு உருண்டைகள் எடுத்து, சிறு சிறு தட்டைகளாகத் தட்டிக்கொள்ளுங்கள்.

* மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் பொரித்தெடுங்கள்.

* கொறிக்க வித்தியாசமான, சத்தான ஸ்நாக்ஸ்.