கோஸ் தொக்கு
  • 311 Views

கோஸ் தொக்கு

சப்பாத்தி பூரியோட தொட்டுக் கொள்ள அப்பப்ப புதுசு புதுசா ஏதாச்சும் செஞ்சாத்தான் வீட்ல இருக்கிற சிறுசு முதல் பெருசு வரை சத்தமில்லாம சாப்பிடுவாங்க.. ஹோம் மேக்கர்ஸ்க்கு ஓ.கே. எங்கள மாதிரி வொர்க்கிங் வுமன்ஸ்க்கு நைட் டின்னர் ரெடி பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்னு புலம்பித் தவிக்கிற தாய்குலங்களே... இந்த கோஸ் தொக்கு உங்களுக்காகவே... ஈஸியா வேலைய முடிச்சிட்டு நிம்மதியா சாப்பிடுங்க!

தேவையான பொருட்கள்:

  • வதக்கி மிக்ஸியில் அரைத்த கோஸ் - 1 கப்
  • வறுத்து பொடித்த வெந்தயம் - 14 டீ ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கடுகு - சிறிதளவு
  • நல்லெண்ணெய் - 100 கிராம்
  • வெல்லம் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

* இதில் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்த கோஸ் விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.

* வெந்தயத்தூள், வெல்லத்தை சேர்க்கவும்.

* ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, வதக்கி அரைத்து சேர்த்தால் சுவையும் மணமும் இன்னும் அமோகமாக இருக்கும்.