கோஸ் மசாலா
 • 108 Views

கோஸ் மசாலா

தேவையானவை:

 • முட்டைகோஸ் - 1/2 கிலோ
 • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
 • இஞ்சி - 1 துண்டு
 • பூண்டு - 2 பல்
 • உருளைக்கிழங்கு - 2
 • தக்காளி - 2
 • பச்சைமிளகாய் - 1
 • கொத்தமல்லி - சிறிதளவு
 • மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
 • எண்ணெய் - தேவையான அளவு
 • நெய் கலவை - தேவையான அளவு
 • பட்டை - 4 துண்டு
 • கிராம்பு - 2
 • கருஞ்சிரகம் - 1/2 டீஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன் ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, கருஞ் சிரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் தனித்தனியாக எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் முட்டை கோஸ் போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.