பனீரை பயன்படுத்தி நிறைய ரெசிபி செய்தவங்களுக்கு இந்த குடமிளகாய் பனீர் ஃப்ரையை சுலபமாய் செய்து சுவையாய் சாப்பிடலாம்...
பனீரை துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். சோயா சாஸ், பூண்டு - மிளகாய் சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். சுவையான குடமிளகாய் பனீர் ஃப்ரை தயார்.