கேரட் சாலட்
  • 172 Views

கேரட் சாலட்

தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ

தேவையான பொருட்கள்:

  • துருவிய கேரட் - 1 கிலோ
  • முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/4 கிலோ
  • தேங்காய்த் துருவல் - 1 கப்
  • எலுமிச்சம்பழம் - 1
  • நறுக்கிய குடை மிளகாய் - 50 கிராம்
  • நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கட்டு
  • உப்பு, மிளகுப்பொடி - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

* திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

* அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.

* ஆரோக்கிய குளிர்ச்சியான உணவு ரெடி!