கேரட் வெள்ளரி மோர்
  • 113 Views

கேரட் வெள்ளரி மோர்

தேவையான பொருட்கள்:

  • சற்று புளிப்பான மோர் - 2 கப்
  • வெள்ளரி - 1 துண்டு
  • கேரட்(சிறியதாக) - 1
  • மல்லித்தழை - சிறிது
  • இஞ்சி - 1 துண்டு
  • வறுத்த சிரகப் பொடி - அரை டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு

செய்முறை:-

கேரட்டை தண்ணீரில் கழுவுங்கள், வெள்ளரி, கேரட் இரண்டையும் தோல் நீக்கி, துண்டுகளாக்கி, மல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். மோரையும் அதனுடன் சேர்த்து அரை நிமிடம் ஓடவிட்டு, வடிகட்டி சீரகத்தூள் சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறுங்கள்.