முந்திரி கேக்
  • 304 Views

முந்திரி கேக்

தேவையானவை:

  • முந்திரிப் பருப்பு - 1/4 கிலோ
  • சர்க்கரை - 1/4 கிலோ
  • ஏலக்காய்ப் பொடி - 1 ஸ்பூன்
  • நெய் - 50 கிராம்

செய்முறை:

முந்திரிப் பருப்பை வாணலியில் நெய் விட்டு, நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையை சிறிது நீர் விட்டுப் பாகு காய்ச்சவும். கம்பிப்பாகு பதம் வந்தவுடன் முந்திரிப்பருப்புப் பொடி, ஏலக்காய்ப் பொடி போட்டுக் கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். ஐந்து அல்லது ஆறாவது நிமிடத்தில் பதம் வந்துவிடும். நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டிப் பரப்பவும். ஆறியதும், விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போடவும். மிகவும் எளிய சத்தானதும் கூட.