கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நிறைய செய்யலாம். குறிப்பாக மசியல் அதீத சுவையுடன் இருக்கும். அதோடு கருணைக்கிழங்கு மருத்துவம் நிறைந்ததும்கூட. ஆமாங்க! மூலத்துக்கு இது ரொம்ப நல்லது. என்னங்க...எங்க போறீங்க...மசியல் செய்யத்தானே
நார்சத்து நிறைந்த நூக்கலை பலரும் சமைப்பதே இல்லை. சிலர் சாம்பார் வைப்பதோடு சரி. ஆனால் நூக்கலை பல விதமாய் சமைக்கலாம். உருளை கிழங்கைப் போல இதுலும் வெரைட்டிஸ் செய்யலாம். நூக்கல் உடலுக்கு மிகவும் நல்லது. அஜீரணம், மலச்சிக்கல், சளி, மூச்சு கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தினம் தினம் என்ன காய் வைக்குறதுனு அம்மாக்களுக்கு ஒரே டென்ஷனா இருக்கும். கத்திரிக்காய், அவரைக்காய், கேரட், முட்டைக்கோஸ்னு அதையே வைச்சாலும் சலிப்பாக இருக்குது. அதே நேரத்துல விதவிதமா வைக்கணும்னு ஆசைதான் ஆனா...என்ன வைக்குறது யோசனை அப்படித்தானே..
லெமன் சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம்ன்னு நிறைய சாத வகைகள் செய்து பார்த்திருப்பீங்க.... மல்டி பொடி சாதம்ன்னு ஒரு சாதம் இருக்கு தெரியுமா? தெரியாதவங்க உடனே செய்து பாருங்க! இந்த சாதம் சுவையாக இருப்பதோடு உடலுக்கு வலுவையும் தரக்கூடியது.
உடம்பைக் குறைப்பதே பெரும்பாடு... என அலுத்துக்கொள்ளும் பெண்மணிகளே... உங்கள் எடையைக் குறைக்க எளிய வழி: வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உணவில் புரோகோலி சேர்த்துக்கொள்ளுங்கள். எடை குறைவதுடன் ஆரோக்கியமாக வாழலாம். அரைவேக்காடுதான் சிறந்தது!
கொளுத்தும் வெயிலில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. குறிப்பா வெந்தயக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. ஒரேமாதிரி சமைக்காமல் இந்த மாதிரி வித்தியாசமாக பருப்பு சப்ஜி செய்து சாப்பிடலாமே..
உடலுக்கு சத்தான பாகற்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிக்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை, அதன் கசப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் மகத்துவத்தை உணர வைத்து குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை.
எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்!
நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். ஆரோக்கியமாகவே வாழ கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் நாம், இன்றைய சூழலில் ஆரோக்கியம் என்பதை விட்டு விட்டு கண்களுக்கு அழகானதையே சமைத்து உண்கிறோம். உங்கள் ஆரோக்கியத்தை பேணி காக்க இதோ, சுவையான சத்தான தானிய காய்கறி சாம்பார்.
காராமணியை 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய காராமணியுடன் பருப்புகளை சேர்த்து, மூன்று கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.