கத்தரிக்காயைக் காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காகப் பிளந்து, எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து மூடி அவனில் 5 நிமிடங்கள் வேக விடவும்.
ரொட்டியின் கெட்டியான மேல் பாகத்தை எடுத்து விட்டு அதன் மிருதுவான பாகத்தை விரல்கள் அளவு மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். கொஞ்சம் வெண்ணெயை எடுத்து உருக வைத்துக் கொள்ளவும்.
சோளத்தை பாலுடன் சேர்த்து கொதிவராமல் வேக வைக்கவும். பாலின் அளவு மிக குறையும் வரை வேக விடவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி சீரகம், நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு தாளிக்கவும்.
எலுமிச்சை அல்லது சாத்துக்குடி பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பதற்கு முன் பழத்தை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு வைக்க வேண்டும். அதன் பின் சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.
தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ
கீரைத் தண்டை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதனுடன் பொடித்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்த மல்லி, தயிர் சேர்த்து, கலந்து கொள்ளவும்.