புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் 'ஹார்ஸ்கிராம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது. அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.
வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்துக் கொண்டு, அதில் குடமிளகாய், வெங்காயத் துண்டுகளைப் போட்டு வதக்கிக் கொண்டு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
பதப்படுத்தப்பட்ட காளான்களை வாங்கி உபயோகிக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி, அதில் நான்கு மேஜைக் கரண்டி அளவு எண்ணெய் ஊற்றிக் காய விடவும். காய்ந்தவுடன், இந்தக் காளான்களைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
1 லிட்டர் பாலில் பன்னீர் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயம், 4 பல் பூண்டு, 1 தேக்கரண்டி சிரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 2 தக்காளிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முதல்நாள் இரவே வெள்ளை கடலையை நீரில் ஊறவைத்து விடவேண்டும். பின் மறுநாள் நன்றாகக் கழுவி குக்கரில் சிறிது உப்பு சேர்த்து கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைத்து நன்றாகக் கழுவி நீரை வடிய வைத்து பின் குக்கரில் சிறிது உப்பு சேர்ர்த்து 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆட்டு மூளையா... எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கரம் மசாலாவில் செய்த உணவில் மணமும் ருசியும் தனியா தெரியும்... இந்த கரம் மசாலவை நாம் வீட்லயே அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. பங்கு என்று குறிப்பிட்ட அளவு கப் அல்லது டம்ளர் அல்லது ஆழாக்கால் தேவைக்கேற்ற அளவில் அரைத்துக் கொள்ளலாம். ஜிப் லாக் கவரில் போட்டு பிரீசரில் வைத்தால் வாசனை கடைசி வரை ஒரே மாதிரி இருக்கும்.
மூன்று காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும், அரைத்த விழுதைச் சேருங்கள்.