காலிஃப்ளவர் பக்கோடா
  • 549 Views

காலிஃப்ளவர் பக்கோடா

செய்முறை:

2 கப் கடலை மாவைச் சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு அங்குலம் இஞ்சியைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி மாதுளை விதையைத் தூளாக்கிக் கொள்ளவும். 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதையைச் சற்று கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி சிரகத்தை அரைத்துக் கொள்ளவும். கடலை மாவுடன் தேவையான உப்புத்தூள், 2 தேக்கரண்டி மிளகாய்தூள், 1 சிட்டிகை சோடாமாவு, 2 மேஜைக்கரண்டி நெய், அரைத்த சிரகம், மாதுளை விதை தூள், அரைத்த இஞ்சி, கொத்தமல்லித் தழை, புதினா, கொத்தமல்லி விதை ஆகியவற்றைக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இக்கலவையை அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.


1/2 கிலோ காலிஃப்ளவரை தண்டு நீக்கி, பூப் பூவாக எடுத்துக் கொள்ளவும். கொதிக்கும் தண்ணீரில் பூக்களைப் போட்டு ஒரு நிமிடத்தில் எடுத்து விடவும். இப்பூக்களைக் கடலைமாவுக் கலவையில் முக்கி எடுத்து, வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி, காய வைத்து, அதில் போட்டு நன்கு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.