காலிஃப்ளவர் ஸ்டூ குருமா
 • 155 Views

காலிஃப்ளவர் ஸ்டூ குருமா

தேவையான பொருட்கள்:

 • காலிஃப்ளவர் (வேக வைத்தது) - 1 கப்
 • வெங்காய விழுது - 1 கப்
 • தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
 • டால்டா - 50 கிராம்
 • சீரகம் - 1 டீஸ்பூன்
 • கருவேப்பிலை - தேவையானது
 • மல்லித்தழை - தேவையானது
 • உப்பு - தேவையானது
 • தேங்காய் விழுது - 1 கரண்டி

செய்முறை:

டால்டாவைச் சுட வைத்து பெருஞ்சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். இதில் அரைத்த வெங்காய விழுதைப் போட்டு பச்சை வாசனை போக கிளறி காலிஃப்ளவர், தக்காளி சாஸ், உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியாக, அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கிளறி கருவேப்பிலை, மல்லித்தழை போட்டு இறக்கவும்.