சென்னா பொட்டெடோ ராக்கெட்
  • 284 Views

சென்னா பொட்டெடோ ராக்கெட்

தேவையான பொருட்கள்:-

  • வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு - 1 கப்
  • வேகவைத்து மசித்த சென்னா - 1 கப்
  • பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்


மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 எண்ணிக்கை, பொட்டுக் கடலை பொடி - 2 ஸ்பூன், வறுத்த வேர்க்கடலைப் பொடி - 2 ஸ்பூன், பொடியாய் நறுக்கிய மல்லி, மற்றும் ருசிக்குத் தகுந்த உப்பு, புதினா சிறிதளவு.

பொரிக்கத் தேவையான எண்ணெய் கார்ன்பிளவர், மற்றும் வறுத்த சேமியா சிறிதளவு.

செய்முறை:-

வாயகன்ற பேசினில் வேகவைத்த உருளைகிழங்கை நன்கு மசித்துக் கொண்டு, சென்னாகடலையை குக்கரில் வேகவைத்து நீரை வடித்து ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மசித்த கிழங்குடன் மசித்த சென்னா, பச்சை மிளகாய் பேஸ்ட், இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையானால் சிறிது காரப்பொடி, நறுக்கிய மல்லி, புதினா மற்றும் ருசிக்குத் தகுந்த உப்பு, பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலை பொடி அனைத்தும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்ததை ராக்கெட் ஷேப்பில் செய்து கொண்டு கார்ன்ஃபிளவர் மாவை திக்காக கரைத்துக் கொண்டு அதில் தோய்த்து வறுத்த சேமியாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரிக்க வேண்டும்.

மிதமான தணலில் வைத்து கோல்டன் பிரவுன் கலரானவுடன் இரு பக்கமும் திருப்பி எடுத்தால் மொறுமொறு சுவையுடன் குழந்தைகள் மற்றும் எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையிலான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி.

இந்தக் கலவையை பேஸாக வைத்துக் கொண்டு கட்லெட் போல செய்த தவாவில் இருபக்கமும் சுட்டும் சாப்பிடலாம். குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து போஷாக்கும் இருப்பதால் இது ஒரு சத்துள்ள ஸ்நாக்ஸ். இதற்கு தொட்டுக் கொள்ள டொமோடா சாஸ் நல்ல மேட்ச்சாகும்.