அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் மசாலா கலந்த செட்டிநாட்டு வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம். எளிதாய் செய்து இனிதாய் சாப்பிடுங்கள்! செட்டிநாட்டின் சுவையும் மணமும் அப்படியே ஒட்டிக்கொள்ளும் நாவில்.
கடைசியில் தூவ:
* ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை, ஏலக்காய், மிளகு, கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்லா வதக்கி கலர் மாறியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள், போட்டு வதக்கி சிக்கனை போட்டு அதிக தீயில் கிளறவேண்டும்.
* பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு உப்பும் சேர்த்து நல்லா கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும்.
* பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.
* கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு ஊற்றி கொத்து மல்லி தழை தூவி இறக்க வேண்டும்.