செட்டிநாடு சிக்கன் கிரேவி
 • 341 Views

செட்டிநாடு சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

 • சிக்கன் - 1/2 கிலோ
 • வெங்காயம் - 2
 • தக்காளி - 1
 • மிளகுத்தூள் - 50 கிராம்
 • தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
 • மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
 • தேங்காய் - 1/2 மூடி
 • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 • இஞ்சி-பூண்டு விழுது டேபிள் ஸ்பூன்
 • உப்பூ தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், சிக்கன், உப்பு, மஞ்சள், இஞ்சிப்பூண்டு விழுது இவற்றைக் கலந்து, ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து இறுக்கமான மூடிபோட்டு மூடி, அவனில் 5 நிமிடங்கள் ஹையில் குக் செய்யவும். அதன் பிறகு அந்தப் பாத்திரத்தைத் திறந்து மிளகு, தனியாப் பொடி, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதைச் சேர்த்து மூடி, 3 நிமிடங்கள் ஹையில் விடவும். பிறகு அவனிலிருந்து வெளியே எடுத்து, மூடியைத் திறந்து 3 நிமிடங்கள் மீடியம் ஹையில் வைக்கவும். பாத்திரத்தை 2 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்த பிறகு, சுவையான சிக்கன் கிரேவியை எடுத்துப் பரிமாறவும்.