சிக்கன் தோசை
  • 244 Views

சிக்கன் தோசை

தோசைகளில் பலவிதம் உண்டு. அதிலும் சிக்கன் தோசைனா... கேட்கவா வேணும்..? இப்பவே எச்சில் ஊற ஆரம்பிக்குமே.. தோசை வார்க்கும் போதே இவ்வளவு அழகா இருந்தா.. சாப்பிட எப்படி இருக்கும்? டேஸ்ட்டும் சூப்பரோ சூப்பர்! செஞ்சுத்தான் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:

  • கோழிக்கறி - 200 கிராம்
  • மைதா மாவு - 250 கிராம்
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி, பூண்டி விழுது - 2 டீ ஸ்பூன்
  • காரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீ­ர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.

* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.

* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.