சிக்கன் வித் வெஜிடபிள்ஸ்
  • 677 Views

சிக்கன் வித் வெஜிடபிள்ஸ்

தேவையான பொருட்கள் :

1. முட்டை - 1
2. சோள மாவு - 1 தேக்கரண்டி
3. உப்பு - ருசிக்கு ஏற்ப
4. மிளகு - 1 தேக்கரண்டி
5. பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
6. பீன்ஸ் - 50 கிராம்
7. வெண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி
8. சமையல் எண்ணெய் - 50 மி.லி
9. வெள்ளைப் பூண்டு - 1 பல்
10. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
11. பச்சை மிளகாய் - 2
12. சோயா ஸாஸ் - 1 1/2 மேஜைக்கரண்டி
13. ஷெர்ரி - 1 தேக்கரண்டி
14. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
15. வறுத்த பட்டாணி - 3 மேஜைக் கரண்டி

முன்னேற்பாடு - 1

1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
2. அதில் உள்ள மஞ்சள் கருவை அகற்றி விடவும்
3. வெள்ளைக் கருவை மட்டும் நன்றாக நுரை பொஞ்க அடித்துக் கொள்ளவும்.

முன்னேற்பாடு - 2

1. மிளகைத் தூளாக்கிக் கொள்ளவும்

முன்னேற்பாடு - 3

1. இப்போது பாத்திரத்தில் உள்ள வெள்ளைக் கருவுடன் சோள மாவைப் போடவும்
2. அதனுடன் ருசிக்குத் தேவையான உப்பைக் கலந்து கொள்ளவும்
3. மிளகுத் தூளைச் சேர்த்துக் கொள்ளவும்
4. பச்சைக் கற்பூரத்தையும் அதனுடன் கலந்து கொள்ளவும்
5. இவை எல்லாவற்றையும் ஒன்றாக நன்றாகக் கலந்து கொள்ளவும்.

முன்னேற்பாடு - 4

1. பீன்ஸைக் கழுவவும்
2. சின்னச் சின்னத் துண்டுகளாக ஆக்கிக் கொள்ளவும்
3. அப்போது அதில் வரும் நாரை உரித்து அகற்றி விடவும்.

முன்னேற்பாடு - 5

வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கிக் கொள்ளவும்

முன்னேற்பாடு - 6

1. இஞ்சியைக் கழுவவும்
2. தோலைக் கத்தியால் சுரண்டி எடுத்துக் கொள்ளவும்

முன்னேற்பாடு - 7

1. பச்சை மிளகாய்களைக் கழுவவும்
2. சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

தயாரிப்பு முறை :

1. இப்போது இறைச்சித் துண்டுகளை நன்றாக வேக விடவும்.
2. வெந்தவுடன், இதை எடுத்து முட்டைக் கலவையில் போட்டு விடவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் போட்டு அதில் வெண்ணெயை விடவும்.
4. சூடேறியவுடன், வெட்டி வைக்கப்பட்டுள்ள பீன்ஸை எடுத்து அதில் நன்றாக வதக்கவும்.
5. தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
6. அதே வாணலியில் சமையல் எண்ணெய் நான்கு தேக்கரண்டி அளவில் விடவும்.
7. அதில் தோலுரிக்கப்பட்ட பூண்டையும், வெட்டி வைக்கப்பட்டுள்ள இஞ்சையையும், நறுக்கி வைக்கப்பட்டிருக்கும் பச்சை மிளகாய்களையும், இறைச்சிக் கலவையையும் போடவும்.
8. எல்லாவற்றையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
9. இவை வதங்கியவுடன் அதில் வதக்கிவைக்கப்பட்டுள்ள பீன்ஸைப் போடவும்
10. கூடவே பொடித்து வைக்கப்ட்டிருக்கும் மிளகுத் தூளையும் போட்டுவிடவும்.
11. இதற்குத் தேவையான அளவு உப்புப் போடவும்.
12. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
13. இதன் பிறகு அதில் சோயா ஸாஸை விடவும்.
14. கூடவே ஷெர்ரியையும், சர்க்கரையும், பச்சைக் கற்பூரத்தையும் போட்டுக் கொள்ளவும்.
15. கிட்டத் தட்ட ஓரிரு நிமிடங்கள் வரை அதை வதக்கவும்.
16. வதங்கியபிறகு தயாராக உள்ள பட்டாணியை அதில் தூவிக் கலந்து விடவும்.
17. பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, அதே சூட்டுடன் பரிமாறவும்.