சில்லி சிக்கன் வித் கிரேவி
  • 909 Views

சில்லி சிக்கன் வித் கிரேவி

தேவைப்படும் பொருட்கள் :

1. கோழிக்கறி - 1 கிலோ
2. உப்பு - ருசிக்கேற்ப
3. சோளமாவு - 3 1/2 மேஜைக்கரண்டி
4. முட்டை - 1
5. சில்லி சாஸ் - 1 மேஜைக் கரண்டி
6. சமையல் எண்ணெய் - 50 மி.லி
7. இஞ்சி - 1 சிறு துண்டு
8. சோயா ஸாஸ் - 1 1/2 மேஜைக் கரண்டி
9. ஷெர்ரி - 1 1/2 மேஜைக் கரண்டி
10. இறைச்சி நீர் - 2 மேஜைக்கரண்டி
11. தக்காளிப் பழம் - 1
12. தண்ணீர் - தேவையான அளவு
13. வினிகர் - 1/2 தேக்கரண்டி
 

முன்னேற்பாடு - 1

1. கோழிக் கறியை இரத்த நீர் வராத அளவு, சுத்தமான நீராக மாறும் வரை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.
2. அதைச் சின்னச் சின்னத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

முன்னேற்பாடு - 2

1. இஞ்சியை நன்றாகக் கழுவவும்
2. கத்தியினால் தோலைச் சுரண்டி நீக்கவும்
3. அம்மியில் வைத்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்

முன்னேற்பாடு - 3

1. ஒரு பாத்திரத்தில் கறித் துண்டுகளைப் போடவும்
2. அதில் இஞ்சி விழுதைச் சேர்க்கவும்
3. ருசிக்குத் தேவையான அளவு உப்பைப் போடவும்
4. எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்
5. பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்து விடவும்

முன்னேற்பாடு - 4

1. முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
2. அதை நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்
3. இதில் சோள மாவையும் போட்டுக் கொள்ளவும்.
4. கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்
5. கரைசல் தயாரானவுடன் இதில் ஊற வைக்கப் பட்டிருக்கும் இறைச்சித் துண்டுகளை எல்லாம் எடுத்துப் போட்டு விடவும்.
6. அப்படியே ஊற விடவும்.

முன்னேற்பாடு - 5

1. இப்போது ஒரு பாத்திரத்தில் சில்லி சாஸை விடவும்.
2. அதனுடன் ஸோயா ஸாஸையும் விட்டுக் கொள்ளவும்
3. ஷெர்ரியையும் கலந்து கொள்ளவும்
4. இதில் தக்காளி விழுதையும் போடவும்
5. இப்போது இறைச்சி வேக வைத்த நீரை அதில் ஊற்றவும்
6. அதில் இரண்டு மேஜைக் கரண்டி சோளமாவைப் போடவும்
7. அத்துடன் சிறிதளவு தண்ணீர் கலந்து கொள்ளவும்.
8. மேலும் வினிகரையும் சேர்த்துக் கொள்ளவும்.

தயாரிப்பு முறை :

1. மேலும் சொல்லப்பட்ட பாத்திரத்தை எடுத்து ஒரு அடுப்பின் மேல் ஏற்றவும்
2. நன்றாகக் கொதிக்க விடவும்
3. அதே சமயத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும்
4. சமையல் எண்ணெய் ஐந்து மேஜைக் கரண்டி அளவு அதில் ஊற்றவும்
5. காய விடவும்
6. எண்ணெய் காய்ந்தவுடன், ஊற வைத்து இருக்கும் இறைச்சித் துண்டுகளை எடுத்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
7. பொன்னிறமான இந்தத் துண்டுகளை அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாஸ் கலவையில் தூக்கிப் போடவும்.
8. எல்லாக் கறித் துண்டங்களும் போட்டபின் நன்றாகக் கலவையைக் கொதிக்க விடவும். கொதித்தவுடன் எடுத்துச் சுடச் சுடப் பரிமாறவும்.