கோகனட் மலாய் கோஃப்தா
 • 294 Views

கோகனட் மலாய் கோஃப்தா

தேவையான பொருட்கள்:

 • வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 12 கிலோ
 • சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 • துருவிய சீஸ் - 12 கப்
 • கொத்தமல்லி - சிறிதளவு
 • உப்பு - தேவையான அளவு
 • மிளகுத்தூள் - தேவையான அளவு
 • எண்ணெய் - தேவையான அளவு.

கிரேவிக்கு:

 • துருவிய தேங்காய் - 2 கப்
 • ஃப்ரெஷ் க்ரீம் - 14 கப்
 • பச்சை மிளகாய் - 2
 • சர்க்கரை - 1 டீஸ்பூன்
 • வெங்காயம் - சிறிதளவு
 • எண்ணெய் - 1 டீஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு
 • கிராம்பு - 2
 • ஏலக்காய் - 2

செய்முறை:

மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய சீஸ், சோள மாவு, உப்பு, மிளகுத்தூளைக் கலந்து கொள்ளவும். இதைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும், கோஃப்தா ரெடி! தேங்காயை அரைத்து திக்காக பால் எடுத்துக் கொள்ளவும். எண்ணெயில் கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கடைசியாக ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும். கிரேவி ரெடி! பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களை கிரேவியில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். பாதாம் முந்திரியை அரைத்து சேர்த்தால் டேஸ்ட்டாக இருக்கும்.