கான்ட்வி
  • 131 Views

கான்ட்வி

தேவையானவை:-

  • கடலை மாவு - 1 கப்
  • புளித்த நீர் மோர் - 3 கப்
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தழை - 2 டேபிள் டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்


தாளிக்க:-

  • கடுகு - கால் டீஸ்பூன்
  • எள்ளு - அரை டீஸ்பூன்
  • சீரகம் - கால் டீஸ்பூன்
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2

செய்முறை:-

மாவுடன் மோர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கட்டியில்லாமல் கரையுங்கள். அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து மாவை ஊற்றி நன்கு கிளறுங்கள். இப்போது மாவை எடுத்து ஒரு ட்ரேயின் பின் பகுதியில் தடவுங்கள். இதை சிறிய கத்தியால் லேசாக எடுங்கள் (மாவு வெந்திருந்தால்தான் ஒட்டாமல் எடுக்க வரும்)

இப்போது கத்தியால் மாவை நீளவாக்கில் மெல்லிய ரிப்பன் போல கீறி, அதை பாய் போல சுருட்டுங்கள். அதை குறுக்கே இரண்டாக வெட்டி, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள். அதன் மேல் கடுகு, எள்ளு தாளித்து பரவலாக ஊற்றுங்கள். மல்லித்தழை, தேங்காய் துருவல், மிளகாய்த்தூள் தூவி பரிமாறுங்கள்.