சமையல்
  • 454 Views

சமையல்

* எலுமிச்சை அல்லது சாத்துக்குடி பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பதற்கு முன் பழத்தை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு வைக்க வேண்டும். அதன் பின் சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.

* அடைமாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம். வீட்டில் கார்ன்ப்ரைக்ஸ் தூள் இருந்தால் சிறிது போட்டுக் கலக்கி அடை செய்யலாம். அடை மாவு சேர்த்தாற்போல் ஆவதுடன் அடையும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

* முட்டை ஆம்லெட் செய்யும்போது, சிறிதளவு வெண்ணெயையும் முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்து பாருங்கள். ருசியாக இருக்கும்.

* காரட், முட்டைகோஸ் இரண்டையும் மெல்லியதாகச் சிவிக் கொள்ளுங்கள். அதில் உப்பு, எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிட்டுப் பாருங்கள். சுவை பிரமாதமாக இருக்கும்.

* உளுந்து வடை செய்யும் போது உளுந்து மாவில் ஊற வைத்த துவரம் பருப்பை ஒரு கைப்பிடி கலந்து செய்தால் உளுந்து வடை சூப்பராக கரகரப்பாக இருக்கும்.