மக்காச்சோள குருணை பொங்கல்
  • 333 Views

மக்காச்சோள குருணை பொங்கல்

வித்தியாசமா பொங்கல் சாப்பிடணும்னு விரும்புகிறவர்களுக்காகவே இந்த சத்தான சுவை மிகுந்த பொங்கல். செய்து சுவைத்துப் பாருங்கள். ஆரோக்கியத்துடன் மணமும் ருசியும் மனதை மயக்கும்.

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி குருணை - 1 கப்
  • பாசிப் பருப்பு - 1 கப்
  • காய்ந்த சோள ரவை - 1
  • இஞ்சி - 1 துண்டு
  • பச்சை மிளகாய்(நறுக்கியது) - 2
  • மிளகு, சீரகம்(பொடித்தது) - 1 டீ ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் - சிறிதளவு
  • எண்ணெய், நெய்(கலந்தது) - 1/2 கப்
  • உடைத்த முந்திரி - 1 கப்

செய்முறை:

* பருப்பு, அரிசி குருணை, மக்காச்சோள ரவையை (ஸ்டோர்களில் கிடைக்கிறது) தனித் தனியாக உடைத்து வாசனை வரும்வரை) வறுத்துக்கொள்ளவும்.

* பிறகு ஒரு குக்கரில் 4-5 கப் தண்­ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்.

* வெந்தபின் நெய் மற்றும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டிக் கிளறவும்.

* இது ஒரு புதுமையான பொங்கல். வித்தியாசமான சுவை கொண்டது.