பாலைக் காய்ச்சி, அதில் சர்க்கரை, கார்ன்ஃபிளேக்ஸ், பிஸ்கெட் சேர்த்து, நன்கு ஊறவிடுங்கள். ஆறியதும், வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக்கி பாலுடன் சேர்த்து, மிக்ஸியில் சில நொடிகள் அடித்து, நன்கு குளிரவைத்து, பரிமாறுங்கள்.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாஷியம், வைட்டமின் பி6, பாலின் புரதம், கார்ன்ஃபிளேக்ஸின் மாவுச்சத்து ஆகியன, குழந்தைகளுக்கு அபரிமிதமான சக்தியை அளிக்கின்றன. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் பொதுவான வளர்ச்சிக்கும் இது ஏற்றது.