தயிர் பூரண சோமாஸ்
  • 126 Views

தயிர் பூரண சோமாஸ்

தேவையானவை:

  • கெட்டித் தயிர் - 2 தம்ளர்
  • சர்க்கரை - 2 தம்ளர்
  • தேங்காய்த் துருவல் - 1 கப்
  • கிஸ்மிஸ் பழம் - சிறிது
  • மைதா மாவு - 1 தம்ளர்
  • பொரிக்க - நெய்

செய்முறை:

கெட்டித் தயிரைச் சுத்தமான துணியில் கொட்டிப் பிழிந்து, தண்ணீர் முழுவதையும் வடித்து விடவும். எஞ்சியிருக்கும் தயிர் விழுதில் சர்க்கரை, தேங்காய்த் துருவல், கிஸ்மிஸ் பழம், ஒரு சிட்டிகை உப்பு எல்லாம் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மைதா மாவில் சிறிது நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து சிறு அப்பளங்கள் சுட்டுக் கொள்ளவும். ஒவ்வோர் அப்பளத்திலும் தயிர்ப் பூரணத்தை இரண்டிரண்டு ஸ்பூன் வைத்து மூடி, ஓரங்களைச் சேர்த்து அழுத்தி மூடவும். வாணலியில் நெய்யை விட்டுக் காய்ந்தபின், சோமாஸ்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சோமாஸ்கள் எல்லோரையும் கவரும்.