தால் சூப்
  • 465 Views

தால் சூப்

வெஜிடபிள் சூப், காளான் சூப், தக்காளி சூப் என்று பலவகையான சூப் வகைகளை செஞ்சு சாப்ட்ருப்போம். அந்த வகையில் தால் சூப்பும் மிக சுவையானதொரு சூப். சுவையுடன் இருப்பதோடு ஆரோக்கியத்தையும் தரவல்லது இந்த சூப். சமையல் ராணிகள் இதையும் ட்ரை பண்ணிப்பாருங்க.. சூப்பரா சூப் குடிங்க.

தேவையான பொருள்கள்:

  • மைசூர் பருப்பு - 1/2 கப்
  • வெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
  • வெங்காயம் நறுக்கியது - 1 டீ ஸ்பூன்
  • பூண்டு - 2 பல்
  • தக்காளி சிறியது - 2
  • மல்லித்தழை - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெண்ணெயைச் சூடாக்கி அதில் பூண்டு, வெங்காயத்தை வதக்கவும்.

* இரண்டு நிமிடம் கழித்து இத்துடன் பருப்பு, முழுத்தக்காளி உப்பு மூன்றையும் சேர்த்து வேக விடவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.

* பிறகு வெந்த தக்காளியின் மேல் தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் ஸ்மூத்தாக அரைத்து பருப்புக் கலவையுடன் சேர்த்து மல்லி இலையை தூவிப் பரிமாறவும்!

* காரம் தேவை என்றால் மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம்.