பனீர்னு சொன்னாலே எல்லாருக்கும் நாவில் எச்சில் ஊரும், அதுலயும் ஸ்பெஷலா சீஸ் தூவி ஸ்பைஸியா சாப்பிட்டா.... ஆஹா.... ம்..ம்.. இப்பவே சாப்பிடணும் போல இருக்குதா?... இதோ உடனே செய்து சாப்பிடுங்க தூத் மக்கன்வாலா... சப்பாத்தி, நாண், பரோட்டாக்கு இதுதான் சரியான மேட்சுனு நீங்களே சொல்லுவீங்க....
* பனீரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து, வெண்ணெயில் ஒவ்வொன்றாக வதக்கவும்.
* இஞ்சி, பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்.
* மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும்.
* வெந்தய இலை, தயிர் சேர்க்கவும்.
* ஓரளவு கொதித்ததும் பனீர் துண்டுகள் சேர்க்கவும்.
* விருப்பப்பட்டால் சிகப்பு கலர் சேர்க்கலாம்.
* நன்றாகக் கொதித்ததும், பாலாடை சேர்த்து, பச்சை வெங்காயம், தக்காளி மற்றும் எலுமிச்சை பழ வில்லைகளுடன் பரிமாறவும்.
பன்னீரில் புரோட்டீன், வைட்டமின் நிறைய உண்டு. கொலஸ்ட்ரால் கிடையாது. தயிரிலும், வெண்ணெயிலும் கொழுப்பும், கால்சியமும் உண்டு.