முருங்கைக்காய் கூட்டு
  • 110 Views

முருங்கைக்காய் கூட்டு

ஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க.

தேவையான பொருட்கள்:

  • சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்
  • கடலைப்பருப்பு - கால் கப்
  • பாசிப்பருப்பு - கால் கப்
  • தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • காய்ந்த மிளகாய் - 2
  • சீரகம் - கால் டீ ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன்

தாளிக்க:

  • எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்
  • கடுகு - கால் டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

* முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

* பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.

* கடைசியாக வெந்த பருப்புகளை அதில் சேர்த்து, தாளித்து இறக்கவும்.