ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
  • 517 Views

ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்

தேவையானவை:

  • பேரீச்சம்பழம் - 10
  • பால் - 2 கப்
  • பாதாம் - 4
  • முந்திரி - 4
  • அக்ரூட் - 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக் கொள்ளுங்கள். பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள். நன்கு ஊறியதும் (பால் ஆறியதும்), தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, குளிரவைத்துக் குழந்தைகள் கையில் கொடுங்கள். சுவைத்துப் பார்த்து குதூகலிப்பார்கள்.

இந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், புதிய விஷயங்களைக் கிரகிக்கும் திறனையும் இது அதிகப்படுத்துகிறது.