எக் காலிஃபிளவர் பொடிமாஸ்
  • 88 Views

எக் காலிஃபிளவர் பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:

  • காலிஃபிளவர் - ஒரு சிறிய கப்
  • முட்டை - 2
  • வெங்காயம் - 1
  • மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
  • நெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, காலிஃபிளவர், வெங்காயம் இரண்டையும் போட்டு மூடி வைத்து 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். பிறகு பாத்திரத்தைத் திறந்து, அதில் முட்டையை ஊற்றி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கிளறி, மீண்டும் மூடி, மீடியம் ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். மேலும் பாத்திரத்தை 2 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். சாதம், ஃபிரைடு ரைஸ்சுக்கு நல்ல காம்பினேஷன் இந்த எக் காலி ஃபிளவர் பொடிமாஸ்.