முட்டை சீஸ் பரோட்டா
  • 497 Views

முட்டை சீஸ் பரோட்டா

தேவையானவை :

  • சீஸ் - 25 கிராம்
  • கொத்தமல்லித்தழை - 1/2 கப்
  • புதினா இலை - 1/4 கப்
  • பச்சை மிளகாய் - 2
  • மூன்று முட்டை - 3
  • உப்புத்தூள் - தேவையானவை
  • மிளகாய்த்தூள் - சிறிது
  • சமையல் எண்ணெய் - சிறிது

செய்முறை :

25 கிராம் சீஸை மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும், 1/2 கப் கொத்தமல்லித்தழை, 1/4 கப் புதினா இலை, 2 பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மூன்று முட்டைகளைத் தேவையான உப்புத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் கலந்து முட்டை அடிக்கும் கருவியால் அடித்துக் கொள்ளவும்.

இத்துடன் நறுக்கிய பொருட்களை கலந்து கொள்ளவும். வாணலியில் 5 மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டைக் கலவையை ஊற்றிக் கிளறி முட்டை வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். கோபி பரோட்டாவிற்கு மாவு தயாரித்தது போல் தயாரித்துக் கொள்ளவும்.

அதே முறையில் காலிஃப்ளவருக்குப் பதிலாக முட்டையையும், சீஸையும் தூவிப் பரோட்டாக்கள் செய்து சமையல் எண்ணெய்யை காய வைத்து சிவக்க வறுத்து எடுக்கவும்.