ஈஸி முட்டை புலாவ்
  • 326 Views

ஈஸி முட்டை புலாவ்

தேவையான பொருட்கள்:-

  • புலாவ் அரிசி - 500 கிராம்
  • வெங்காயம் - 3
  • முட்டை - 4
  • பச்சை மிளகாய் - 3
  • மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • நெய் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை:-

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். உப்பு, பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை முட்டையோடு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும். நெய் சூடானவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பொன்னிறமானவுடன், முட்டை கலவையை சேர்த்து வதக்கவும். முட்டை வேகும் போது நன்றாக கிண்டவும். முட்டை வெந்து கட்டிகளானவுடன் இறக்கி வைக்கவும். அரிசி எடுத்து உதிரியாக சாதம் செய்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருக்கும்போது சமைத்த முட்டையை சேர்த்து கலக்கவும். உடனே பரிமாறவும்.