முட்டை ரவாப்பணியாரம்
  • 451 Views

முட்டை ரவாப்பணியாரம்

பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி. விதவிதமா பணியாரம் செஞ்சாலும் இனிப்பு பணியாரத்துக்கு என்றைக்குமே ஒரு தனி வரவேற்பு நம் மக்கள் கிட்ட இன்றைக்கும் இருக்கு. அதுலயே கொஞ்சம் வித்தியாசமா ரவையும், முட்டையும் கலந்து மணக்க மணக்க சூடான பணியாரம் செய்து ஒரு கப் காபியுடன் மாலை வேளையில் சுவைத்துப் பாருங்களேன். ம்ம்... ஆஹா என்ன ருசி...

தேவையான பொருட்கள்:

  • முட்டை - 2
  • ரவை - 150 கிராம்
  • மைதா - 150 கிராம்
  • தேங்காய்ப் பால் - 1 கப்
  • சர்க்கரை - 150 கிராம்
  • சோடா உப்பு - 2 சிட்டிகை
  • ஏலக்காய் - 4
  • முந்திரிப்பருப்பு - 20 கிராம்

செய்முறை:

* முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.

* ரவை, மைதாமாவு, சர்க்கரை, தேங்காய், அடித்த முட்டை, சோடா உப்பு, ஏலத்தூள், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு இவைகளை இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும்.

* பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.

* சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.

* பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு வெந்ததும் எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும்.