இலை அடை
  • 305 Views

இலை அடை

தேவையானவை:

  • பச்சரிசி - 1 கப்
  • தேங்காய்த்துருவல் - 1 கப்
  • வெல்லம் - தேவைக்கேற்ப
  • ஏலக்காய் - சிறிதளவு.

செய்முறை:

அரிசி மாவைச் சப்பாத்திக்குப் பிசைவதுபோல் பிசைந்துகொள்ளவும், தேங்காய், வெல்லத்தூள், ஏலக்காய்த் தூள், மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளவும். பிசைந்த பச்சரிசி மாவினை அழகாக ரவுண்டாக வெட்டி எடுக்கப்பட்ட வாழையிலையில் வைத்துத் தட்டி அதன் மேல் தேங்காய்க் கலவையை வைத்து இரண்டாக மடித்து இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும். வெந்தபின் எடுக்கவும் சூடான சுவையான இலை அடை தயார்.