எறா புலவு
 • 521 Views

எறா புலவு

தேவையான பொருட்கள்:

 • வெங்காயம் - 1
 • பீட்ரூட் - 1
 • மல்லித்தழை - 1/2 கப்
 • வெள்ளரிக்காய் - 1
 • பாதாம் பருப்பு - 10
 • பாஸ்மதி அரிசி - 1/4 கிலோ
 • கிராம்பு - 6
 • பூண்டு - 6 பல்
 • இஞ்சி - 2 அங்குலம்
 • பச்சை மிளகாய் - 3
 • எறா - 200 கிராம்
 • தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
 • வெள்ளை மிளகு - 1/2 தேக்கரண்டி
 • நல்லெண்ணெய் - 1/4 கப்
 • கருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை :

2 பெரிய வெங்காயத்தை மெலிதாக, நீளவாக்கில் நறுக்கி சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். 1/2 கப் அளவு மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வெள்ளரிக்காயை வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். 10 பாதாம் பருப்பை வறுத்துக் கொள்ளவும். இவைப் புலவை அலங்கரிப்பதற்குத் தயாரிக்க வேண்டியவை.

1/4 கிலோ பாஸ்மதி அரிசியை 400ml தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 6 கிராம்பு, 6 பல் பூண்டு, இவற்றை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயம், 2 அங்குலம் இஞ்சி, 3 பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

200 கிராம் ஏறாவைச் சுத்தம் செய்து கொள்ளவும். தக்காளி சாஸ் 1 மேஜைக்கரண்டி, 1/2 தேக்கரண்டி வெள்ளை மிளகு, ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா இவற்றுடன் ஏறாவைத் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 மணிநேரம் ஊற விடவும்.

4 பல் பூண்டு, 4 பச்சை மிளகாய், 2 அங்குலம் இஞ்சி, 2 பெரிய வெங்காயம் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்த ஏறாவை ஒவ்வொன்றாக மைதா மாவில் புரட்டி எடுத்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு வதக்கி, இத்துடன் 10 மிளகு, 5 ஏலக்காய், 1 அங்குலம் பட்டை போட்டு வதக்கி, பின் 1/2 தேக்கரண்டி வெள்ளை மிளகு, 1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து வதக்கி இறக்கவும்.

குக்கரில் அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதித்ததும் அரிசியைப் போட்டு, வதக்கிய பொருட்கள், வறுத்து வைத்துள்ள ஏறா ஆகியவற்றைக் கலந்து, கிளறி, குக்கரை மூடவும். ஒரு விசில் சப்தம் கேட்டதும் குக்கரை இறக்கவும். குக்கர் திறக்க வந்ததும் 1 தேக்கரண்டி கரம் மசாலா தூவிக் கிளறவும்.

பரிமாறும் பொழுது அலங்காரத்திற்குத் தயாரித்துள்ள பொருட்களைக் கொண்டு அலங்கரித்து வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.